கரூரில் நடந்த தவெக விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (செப்டம்பர்- 28) நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், கரூர் சம்பவம் எதிர்பாராத ஒரு விபத்து. யாரையும் குறை சொல்லி பயனில்லை. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் இறப்பை எல்லாம் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. 39 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் இருவர் மோசமான நிலையில் உள்ளனர்.
இது நம் எல் enலோருக்கும் ஒரு படிப்பினை. பெருந்துயரங்கள் நிகழாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளை இழந்துள்ள குடும்பத்தினர் எல்லோருக்கும் எனது ஆறுதல், குறிப்பாக தமிழக வெற்றிக் கழக பிள்ளைகள், கட்சியின் முதன்மை பொறுப்பாளர்கள் மற்றும் விஜய்க்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இரண்டு மாதத்தில் முதல்வரான பிறகு நடவடிக்கை எடுப்பேன் என்றார். இவ்வளவு நாள் ஆன நிலையில் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளில் பலர் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுவே தான் இப்போதும் நடக்கும் என்றார்.
தவெக தலைவர் விஜய் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு, ஆந்திராவில் திரை அரங்கில் சென்று அல்லு அர்ஜுனா நடித்த புஷ்பா 2 படம் பார்த்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதற்கு இவர் பொறுப்பல்ல.. ஆனால் இவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அது போல்தான் இதுவும் ஒரு வழக்கு. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அவர்களாக சென்று விபத்தை ஏற்படுத்தினார்களா அப்படி பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.