மதுவிலக்கு, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, 5 தலைநகரங்கள் : நாதக-வின் தேர்தல் வாக்குறுதிகள்!

Published On:

| By Kavi

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச் 19) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதன்முதலில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது சீமானின் நாம் தமிழர் கட்சிதான். 

ADVERTISEMENT

இந்நிலையில்  இன்று சென்னை லீ ராயல் மெரிடியன் விடுதி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தேர்தல் அறிக்கையை சீமான்  வெளியிட்டுள்ளார். 

முக்கிய அம்சங்கள்..

ADVERTISEMENT

49 தலைப்பில், 462 பக்கத்தில் வெளியான நாதக தேர்தல் அறிக்கையில்,  

தமிழ்நாட்டில் சென்னை,  கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி,  மதுரை,  கன்னியாகுமரி  என ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும். 

ADVERTISEMENT

முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும். 

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். 

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 75 சதவீதம் கிடைக்க போராட்டம்

3 சட்டமன்ற தொகுதிக்கு 1 நாடாளுமன்ற தொகுதி என வலியுறுத்தப்படும். 

பெண்களுக்கு தனித்தொகுதி. 

பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை

தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்

மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்கப்படும். 

குடிநீர் விற்பனைக்கு தடை விதித்து, இலவச குடிநீர் வழங்கப்படும். 

இட பங்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

மாநிலத்தில்  தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி. 

தூய்மை பணியாளர்களுக்கு  உயரந்த சம்பளம், வழக்குகளுக்கு முடிவு, மேம்படுத்தபட்ட பாதுகாப்பு உடைகள்  வழங்கப்படும்.  தனியார்மயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

ஆறுகளில் 15 கிலோ மீட்டரில் ஒரு தடுப்பணை கட்டப்படும். 

ஆற்றங்கரையோரங்களில் தொழிற்சாலைகள் செயல்பட தடை விதிக்கப்படும்

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கப்படும்.

பொது மருத்துமனைகளில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க தனி விடுதி அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் பெண்களுக்கு சரிபாதி பங்கு அளிக்கப்படும். 

தமிழ் மொழியில் மருத்துவ கல்வி. 

சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம்.

கனிமவளத்தை பாதுகாக்கும் வகையில்,  தனியாருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நாம் தமிழர் ஆட்சி நீக்கம் செய்யும்.

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக கடும் தண்டனைகளுடன் கூடிய புதிய சட்டங்கள் இயற்றப்படும்.

உள்ளூரில் ஓடும் ரயில்களை மாநில அரசே நிர்வகிக்க சட்டம் கொண்டுவரப்படும்.

கிராமங்களில் இருந்து 20 கிமீ தூரத்தில் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்படும். 

மருத்துவப்படிப்பு தூய தமிழ்மொழியில் நடத்தப்படும்.

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க சிறப்பு கடலோர காவல்படை ‘நெய்தல் படை’ என்ற பெயரில் உருவாக்கப்படும்.

பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை, ஆண் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை என்று மாற்றியமைக்கப்படும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

பெண்கள் பாதுகாப்பு, மாநில சுயாட்சி, இயற்கை வேளாண்மை மற்றும் அதிகாரப் பரவலாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share