அதிமுக, திமுக, நாதக, காங்கிரஸ்… மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு தவெகவில் சீட்!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் இன்று  (மார்ச் 29)வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜய் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இதில் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் மூத்த நிர்வாகிகளாக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள்.

அதாவது விசிகவிலிருந்து வந்த ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடுகிறார்.

அவருடன் அதிமுகவில் இருந்து வந்த சத்தியபாமா திருப்பூர் வடக்கு தொகுதியில் களம் காண்கிறார்.

அதுபோன்று சிடி நிர்மல் குமார் (அதிமுக), திருப்பரங்குன்றம் தொகுதியிலும், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்து விஜய் கட்சியில் சமீபத்தில் இணைந்த வடசென்னையைச் சேர்ந்த வி எஸ் பாபு கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தூசி மோகன் ராசிபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் அதிமுகவிலிருந்து வந்தவர்களான கு.ப.கிருஷ்ணன் – லால்குடி, ஜேசிடி பிரபாகர் – ஆயிரம் விளக்கு, ஸ்ரீதர் – வால்பாறை, ரெட்டியார்பட்டி நாராயணன்- நாங்குநேரி, திருப்பதி – திருப்பத்தூர், கவிதா ராஜேந்திரன்- ஜெயங்கொண்டம், சுப்ரமணியன் -கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செல்வம், துணை முதல்வர் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியிலும், திமுகவிலிருந்து வந்த நவல்பட்டு விஜி – திருவெறும்பூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த ஜெகதீச பாண்டியன் சங்கராபுரம் தொகுதியிலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து வந்த சரீஃப் புதுக்கோட்டை தொகுதியிலும், மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து வந்த ஹாரூண் ரசீத் மயிலாடுதுறை தொகுதியிலும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து வந்த முஸ்தபா மதுரை மத்திய தொகுதியிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் சார்பில் போட்டியிடுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share