கூடுதல் தொகுதிகள்.. இன்று சிபிஎம் அவசர மாநில செயற்குழுக் கூட்டம்- முக்கிய முடிவு அறிவிப்பு?

Published On:

| By Mathi

CPM DMK Talks

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வரும் நிலையில் சிபிஎம் கட்சியின் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் இன்று மார்ச் 21-ந் தேதி நடைபெற உள்ளது.

திமுக கூட்டணியில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 2-ல் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

தற்போதைய சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கும் கூடுதலான இடங்களை சிபிஎம் கேட்டு வருகிறது. திமுக 5 தொகுதிகளை தர முன்வந்துள்ளது.

ஆனால் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழு, கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகளைக் கொடுக்க வேண்டும் அல்லது கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதில் சிபிஎம் குழு உறுதியாக இருப்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறியாகி இருக்கிறது. திமுக குழ்வுடன் சிபிஎம் குழு நடத்த 3 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் சிபிஎம் கட்சியின் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் இன்று மார்ச் 21-ந் தேதி சென்னையில் நடைபெ ற உள்ளது. முன்னதாக இக்கூட்டம் மார்ச் 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இன்றைய கூட்டத்தில் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் முக்கியமான முடிவை சிபிஎம் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share