விஜய் காரை வழி மறித்த பெண் நிர்வாகிக்கு சீட் மறுப்பு.. அதிருப்தியில் ஆதரவாளர்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

தூத்துக்குடியில் விஜய் நண்பருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் காரில் இருந்த தவெக கொடியை கழற்றி வீசி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இன்று (மார்ச் 29) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.இதில் தூத்துக்குடி தொகுதி தவெக வேட்பாளராக விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.டி. செல்லபாண்டியன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் தீவிரமாக பணியாற்றி வந்த தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், காரில் இருந்த தவெக கொடி மற்றும் விசில்களை கழற்றி வீசினர்.

ADVERTISEMENT

தூத்துக்குடி தொகுதியில் அஜிதா ஆக்னலுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பு மறுக்கப்பட்டபோது அஜிதா ஆக்னல் பனையூரில் விஜய்யின் காரை வழிமறித்தார். பின்னர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியிலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அஜிதா ஆக்னல், தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாததால் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share