ADVERTISEMENT

காரைக்குடியில் சீமான் போட்டி!

Published On:

| By Kavi

சட்டமன்றத் தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு  நாம் தமிழர் கட்சி சார்பில் , “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” என்ற பெயரில் திருச்சியில் இன்று (பிப்ரவரி 21) மாநாடு நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார். 

இவர்களில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 மருத்துவர்கள்உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

இதில் காரைக்குடி தொகுதியில் சீமான்,  மேட்டூர் தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யாராணி ஆயிரம் விளக்கு தொகுதியில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share