திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. செ.கு. தமிழரசன் (Se.Ku. Tamilarasan) சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்தது இந்திய குடியரசுக் கட்சி. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற போது, தற்காலிக சபாநாயகர் பதவிக்கு செ.கு. தமிழரசன் மற்றும் அப்போது தேமுதிகவில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா, செ.கு. தமிழரசனையே தற்காலிக சபாநாயகராக்கினார். அந்த அளவு ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்தார் செ.கு. தமிழரசன்.
தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சி இடம் பெறவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்று நேரத்தில் செ.கு.தமிழரசன் சந்திக்கிறார். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு செ.கு. தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி ஆதரவை தெரிவிக்க இருக்கிறது.
