தைலாபுரம் இல்லத்தில் சசிகலா

Published On:

| By Kavi

பாமக நிறுவனர் ராமதாஸை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சந்தித்து பேசியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தற்போது வரை சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ராமதாஸ் தரப்பினர் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.

ADVERTISEMENT

இன்னொரு பக்கம் புதியதாக கட்சி தொடங்கவுள்ளதாக கூறி அதற்கான கொடியை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பசும்பொன்னில் நடந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா அறிமுகம் செய்தார்.

இந்தசூழலில் இன்று தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று சசிகலா, ராமதாஸுடன் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசி வருகிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share