INDvsUAE : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, துபாயில் இன்று (செப்டம்பர் 10) இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆசியக் கோப்பை லீக் போட்டியில் முகமது வசீமின் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசியின் ஆசியக் கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் ஹங்கேரியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இதனையடுத்து துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸை (UAE) எதிர்கொள்கிறது நடப்பு சாம்பியனான இந்திய அணி.
மொத்தமுள்ள 8 அணிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளது. எனினும் பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது, விடுவிப்பது என்பது தான் இந்திய அணிக்கு தலைவலியாக உள்ளது.
சுப்மன் கில் துணை கேப்டனாக உள்ளதால், அவர் தொடக்க வீரராக இறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் ஆதரவு கொண்டுள்ள சஞ்சு சாம்சனை எந்த இடத்தில் களமிறக்குவது என்பதில் அணி நிர்வாகத்திற்கு இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது வசீம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடந்த இரண்டு மாதங்களாக இந்த தொடரில் விளையாட நாங்கள் சிறப்பான தயாரிப்பைச் செய்து வருகிறோம். யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா அல்லது பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்க எங்களால் முடியும். ஓமன் அணியையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதை இலக்காக கொண்டு விளையாடுவோம். இந்த சவால் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
