வீட்டுக்குள் அனுமதி மறுக்கும் விஜய்- சங்கீதா ‘பகீர்’ புகார்- நீதிமன்றத்தில் மனு!

Published On:

| By Mathi

Vijay Sangeetha

தாம் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதால் நீலாங்கரை வீட்டில் தம்மை தங்க அனுமதிக்க மறுக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என்று அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி விவகாரத்து கோரியுள்ளார் சங்கீதா.

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ந் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

இதனிடையே விஜய், நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். விஜய்- திரிஷா இருவரும் ஒரே நிற உடையில் ஒரே காரில் வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சங்கீதாவின் புகாரை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் விஜய் மகளிர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்று புதிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் விஜய்க்கு எதிராக மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

சங்கீதாவின் புதிய மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசிப்பதால் சென்னையில் சொந்தமாக வீடு இல்லை.
  • விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததால் நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுத்து வருகிறார்.
  • விஜய் வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதால் வீடில்லாமல் சென்னையில் தவிக்கிறேன்
  • திரைப்படங்களில் நடிப்பதற்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய், எனக்கும் என் குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் தர வேண்டும்
  • விவகாரத்து பெறும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க உரிமை உண்டு.
  • நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சங்கீதா தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share