பிரதமர் நரேந்திர மோடி, இன்று (அக்டோபர் 1) டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் -ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
நாளைய தினம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், சிறப்பு ரூ. 100 நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காண்பது தற்போதைய தலைமுறை ஸ்வயம்சேவகர்களுக்கு பாக்கியம். தேசிய சேவைக்கான உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற ஸ்வயம் சேவகர்களுக்கு தனது வாழ்த்துக்கள்.
இன்று வெளியிட்ட 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுப்பக்கத்தில் வரத முத்திரையில் சிங்கத்துடன் நிற்கும் பாரத மாதாவிற்கு ஸ்வயம்சேவகர்கள் வணக்கம் செலுத்துவது போன்ற உருவமும் இடம்பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் இந்திய நாணயத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது முதலே, தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபடுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் சிறை சென்றார், அவருடன் பல உறுப்பினர்களும் சிறை சென்றனர். ஆர்.எஸ்.எஸ் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றது மற்றும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” என்று புகழ்ந்து பேசினார்.