கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
காலபந்து உலகில் ஜாம்பவனாக வலம் வருகிறார் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது 40 வயதான இவருக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ளனர்.
மூத்த மகனான கிறிஸ்டியோனோ ரொனோல்டோ ஜீனியர் கடந்த 2010ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் பிறந்தார். அதன்பின்னர் தனது காதலியான ரஷ்ய மாடல் இரினா ஷேக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பிரிந்தார்.

அதற்கு அடுத்த வருடமே ஸ்பெயின் மாடலான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மாட்ரிட் நகரில் சந்தித்தார். பின்னர் இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த நிலையில் இந்த ஜோடிக்கு அலனா மார்டினா மற்றும் பெல்லா இரு குழந்தைகள் பிறந்தது. பெல்லாவுடன் இரட்டை குழந்தைகளில் ஒன்றாக பிறந்த ஆண்குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் ரொனோல்டோவுக்கு பிறந்த 5 குழந்தைகளையும் அன்புடன் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தான் 8 வருட லிவ்-இன் வாழ்க்கைக்கு விடை கொடுக்கும் விதமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இதுதொடர்பாக 31 வயதான ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொனோல்டோ கைமேல் கைவைத்தபடி நிச்சயதார்த்த மோதிரத்தை பதிவிட்டுள்ளார். மேலும், “ஆம், இது என் வாழ்நாள் முழுவதும் நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ரொனோல்டோ – ஜார்ஜினா ஜோடிக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
40 வயதான ரொனால்டோ தற்போது சவுதி அரேபிய கிளப் அல்-நாசர் அணிக்காக விளையாடுகிறார். அதற்காக இந்த ஜோடி தங்களது குடும்பத்துடன் அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் வசித்து வரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.