‘அதை’ சொன்னா மோடி ராஜினாமா செஞ்சுடுவாரே.. கொளுத்திப் போட்ட பாஜக சு.சுவாமி

Published On:

| By Mathi

Modi Swamy

தமக்கு தெரிந்த ‘அமெரிக்க தகவல்களை’ வெளியிட்டால்
பிரதமர் நரேந்திர மோடி தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி இன்று மார்ச் 10-ந் தேதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாகவும் பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, ஏன் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பார்த்து பயப்படுகிறார்? எனக்கு தெரிந்த அமெரிக்க நண்பர்களிடம் பேசிய போது மோடி சமரசம் செய்து கொண்டதாக சொல்கின்றனர். அது எதனால்? யாரால்? என்பதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. அப்படி சொன்னால் மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிடும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

உலக நாடுகளை உலுக்கிய அமெரிக்காவின் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் சில இடங்களில் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக கூட்டணி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த எக்ஸ் பதிவு பேசுபொருளாகி இருக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share