மது பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மது விற்பனையைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தனிநபர் வாங்குவதற்கான உச்சவரம்புவாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோதப் பதுக்கலைத் தவிர்க்கவும், தனிநபர் ஒருவர் ஒரே ரசீதில் (Single Bill) வாங்கக்கூடிய மதுபான அளவை டாஸ்மாக் நிர்வாகம் முறைப்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ADVERTISEMENT

இந்தியத் தயாரிப்பு மதுபானம் (IMFL) மற்றும் இறக்குமதி மதுபானங்கள்: அதிகபட்சமாக 4.5 லிட்டர் மட்டுமே வாங்க முடியும். (அதாவது 750 மி.லி. அளவுள்ள 6 முழு பாட்டில்கள் அல்லது 375 மி.லி. அளவுள்ள 12 அரை பாட்டில்கள் அல்லது 180 மி.லி. அளவுள்ள 24 கால் பாட்டில்கள்).

பீர்: ஒரு நபருக்கு அதிகபட்சமாக 12 பாட்டில்கள் (7.8 லிட்டர்) மட்டுமே விற்பனை செய்யப்படும் (650 மி.லி. பாட்டில் அடிப்படையில்).

ADVERTISEMENT

ஒயின்: அதிகபட்சமாக 9 லிட்டர் வரை வாங்கிக் கொள்ளலாம்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த வரம்பைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் மாவட்ட மேலாளர்கள் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.கணினி வழி கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கைடாஸ்மாக் கடைகளில் விற்பனை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், கணினி அமைப்பு மூலம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

விதிமீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட மேலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கூடுதல் முக்கிய கட்டுப்பாடுகள்ஒவ்வொரு கடையிலும் மதுபான இருப்பு கடந்த ஆண்டு இதே காலகட்ட இருப்பை விட 50%க்கு மேல் இருக்கக் கூடாது.

தினசரி விற்பனை கடந்த ஆண்டை விட 30%க்கு மேல் அதிகரித்தால் அது பதுக்கல் அல்லது மொத்த விற்பனையாகக் கருதி விசாரணை நடைபெறும்.
கடை இயங்கும் நேரத்துக்கு அப்பால் மது சேமிப்பு அல்லது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தலை நியாயமான முறையில் நடத்த மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share