அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக அறிவித்த பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 8) அனுமதி வழங்கியது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தமாக 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அன்புமணி ராமதாஸ், பொது செயலாளர் வடிவேல் ராவணன்
பொருளாளர் திலகபாமா ஆகியோர் அடுத்த ஆண்டு 2026 ஆகஸ்ட் மாதம் வரை தொடர்வார்கள்.
வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு செய்யாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அதே நாள் விடுதலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்
சமூக நீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.
பாமக தலைவர் உரிமை மீட்பு பயணம் வெற்றி பெறச் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி உறுதி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றாததை கண்டித்து கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்
தமிழ்நாட்டில கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முழுமையாக தடை விதிக்க அரசை வலியுறுத்துவது.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைபடுத்துவது.
தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்
தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
காவேரி கொள்ளிடம் பாலாறு அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டுவது
காவிரி கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் (2151 கோடி)
அரசு பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்
9000 உதவி பேராசிரியர்கள் மற்றும் நியமிக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும்
மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்களையும் செயல்படுத்தும் திமுக அரசுக்கு இந்த பொது குழு வாயிலாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடத்தி தர வேண்டும்
6.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்
சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.