உச்சநீதிமன்ற ஊழியர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு- தலைமை நீதிபதி பிஆர் கவாய் அதிரடி!

Published On:

| By Minnambalam Desk

Supreme Court Reservation

உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் முதல் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. Supreme Court Reservation

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற வரலாற்றில் கேஜி பாலகிருஷ்ணனைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாகும் 2-வது தலித் பிஆர் கவாய். பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்.

தற்போதைய தலைமை நீதிபதி பிஆர் கவாய் பதவி காலத்தில், உச்சநீதிமன்ற ஊழியர்களின் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற பதிவாளர், நீதிபதிகளின் உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நியமனம் மற்றும் பதவி உயர்வில் தலித்துகளுக்கு 15%, பழங்குடிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. உச்சநீதிமன்றத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share