நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

Published On:

| By Mathi

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் (Madhan Bob- வயது 71) உடல் நலக் குறைவால் இன்று ஆகஸ்ட் 2-ந் தேதி காலமானார்.

மதன் பாப்.. விசித்திரமான சிரிப்புக்கு சொந்தக்காரர். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.

ADVERTISEMENT

1953-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி சென்னையில் பிறந்தார்.
தமிழ்த் திரை உலகில் இசையமைப்பாளராக தமது பயணத்தைத் தொடங்கி 1984-ம் ஆண்டு வெளியான ‘நீங்கள் கேட்டவை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகராக மிளிர்ந்தவர். அத்துடன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தமது பன்முகத்தை வெளிப்படுத்தியவர். சன் டிவியில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தியவர்.

ADVERTISEMENT

சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் இணைந்து நடித்தவர் மதன்பாப்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மதன் பாப், அண்மைக்காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மதன் பாப் இன்று ஆகஸ்ட் 2-ந் தேதி காலமானார்.

ADVERTISEMENT

மதன் பாப் மறைவுக்கு திரை உலகத்தினரும் அரசியல், சமூக இயக்கங்களின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share