அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விரிவாக பதிலளிக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களைன் ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார்.
தொடர்ந்து நேற்று ஓபிஎஸுடன் ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்றார். அங்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஓபிஎஸும், செங்கோட்டையனும் சசிகலாவை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், நாளை காலை 11 மணிக்கு மேல் கட்சி அலுவலகத்தில் விரிவாக பதிலளிக்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
