உருளைக் கிழங்கை பயன்படுத்தி நம் முகத்தில் கரும்புள்ளிகளைக் குறைத்து பளபளப்பாக மாற்றலாம்.
நமது முகம் அழகாகவும், பொலிவுடனும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். அதற்காக நாம் பல்வேறு அழகுக் குறிப்புகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக முகத்தில் இயற்கையாக ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் அழுக்குகளை நீக்க பெரும்பாலும் விலை உயர்ந்த க்ரீம்களையே பயன்படுத்துகிறோம்.
முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது ஏன்? (Why dark spots appear face)
மெலனின் உற்பத்தி அதிகரிப்பு, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள், ஹார்மோன் மாற்றங்கள், இரும்புச்சத்து குறைபாடு, மரபணு காரணங்களால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரின் சருமமும் வெவ்வேறு விதமாக இருப்பதால், கிரீம்களால் தழும்புகள் மற்றும் முகப்பருக்களை சரிசெய்ய முடியாது. கிரீம்களில் பல்வேறு இரசாயனங்கள் உள்ளன. இந்த இரசாயனங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது, சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
அதே சமயம் எந்தவித செலவும் செய்யாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் நம்முடைய முகத்தை பொலிவாக்கலாம். குறிப்பாக உருளைக் கிழங்கை வைத்தே நமது சருமத்தை அழகாக மாற்ற முடியும்.
உருளைகிழங்கை வைத்து எப்படி பேஸ்பேக் தயாரிப்பது? (potato home remedy for skin)
முதலில் உருளைக்கிழங்கைக் கழுவி நன்றாக உரித்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள தோல்களை மட்டும் மிக்சியில் போட்டு தயிர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும். நீங்கள் இந்த கலவையை குறைந்தது 2-3 மாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் முகம், சருமத்தில் மாற்றங்கள் உங்களுக்கே தெரியும். உருளைகிழங்கு நன்மைகள் (Benefits of potatoes for face) : உருளைக் கிழங்கு சருமத்தைப் பிரகாசமாக்குகிறது, வடுவைக் குறைக்கிறது, முகத்தில் இயற்கையான பளபளப்பை ஏற்படுத்த உதவி புரிகிறது.
கரும்புள்ளிகளை குறைக்கும் அரிசி+ உருளைக்கிழங்கு பேஸ்ட் (Rice + potato facemask)
அரிசியை உருளைக்கிழங்கு தோல் சாறுடன் கலக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, அது காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இந்த இரண்டு படிகளைப் பின்பற்றுவது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும். கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.
