ADVERTISEMENT

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி… மூன்று மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி நிதியுதவி!

Published On:

| By christopher

RCB gave 25 lakhs for that 11 people family

சின்னசாமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவியை ஆர்சிபி அணி இன்று (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக ஜூன் 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், இந்த கொண்டாட்டம் நிகழ்வில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 அப்பாவி ரசிகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது வரை சின்னசாமி மைதானத்தில் எந்தவித கிரிக்கெட் போட்டிகளுடம் நடத்தபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் சம்பவம் நடந்து 84 நாட்களுக்கு பிறகு கடந்த 28ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ரசிகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். அவர்கள் எங்கள் நகரம், எங்கள் சமூகம் மற்றும் எங்கள் அணியை தனித்துவமாக்குவதில் ஒரு பகுதி. அவர்கள் இல்லாதது நம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும்.

எந்தவொரு ஆதரவும் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும், மிகுந்த மரியாதையுடனும், ஆர்சிபி அணி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளது.

இது 𝗥𝗖𝗕 𝗖𝗔𝗥𝗘𝗦 இன் தொடக்கமாகும்: அவர்களின் நினைவைப் போற்றுவதன் மூலம் தொடங்கும் அர்த்தமுள்ள செயலுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு. இதன் ஒவ்வொரு அடியும் ரசிகர்கள் என்ன உணர்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் மற்றும் தகுதியானவர்கள் என்பதைப் பிரதிபலிக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share