RBI-யின் இரண்டு அறிவிப்புகள்… வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Published On:

| By Minnambalam Desk

RBI New guideline for Inoperative Accounts

மத்திய ரிசர்வ் வங்கி ஜூன் 12 அன்று வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, இயங்காத வங்கிக் கணக்குகளையோ (Inoperative Accounts) அல்லது உரிய உரிமையாளரால் எடுக்கப்படாத கணக்குகளையோ (Unclaimed Deposits) மீண்டும் செயல்படுத்தும் முறைகளை எளிதாக்கி உள்ளது.

இதுவரை, இப்படிப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் பல்வேறு ஆவணங்களை அளித்து நேரில் கிளைக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. RBI New guideline for Inoperative Accounts

இதனால் பலர் தங்கள் தொகைகளை பெற முடியாமல் இருந்தனர். இப்போது, ரிசர்வ் வங்கி எளிமையான மூன்று வழிகளை அறிவித்துள்ளது: https://rbidocs.rbi.org.in/

வீடியோ KYC மூலம் (Video KYC):

வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு மூலம் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி, எந்தவொரு கிளைக்கும் செல்லாமல் கணக்கை மீண்டும் செயல்படுத்த முடியும்.

வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் எந்தவொரு கிளைக்கு சென்றாலும் தங்களுடைய கணக்கை மீண்டும் செயல்படுத்த முடியும். இது வாடிக்கையாளர்களுக்கு எளிதான வசதியாக இருக்கிறது.

வங்கிகளால் நியமிக்கப்பட்டுள்ள வணிக நிருபர் (Business Correspondent) மூலமாகவும் இந்த சேவை பெறலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கிறது.

இவை யாருக்குப் பயன்?

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப்பரிவர்த்தனை இல்லாத மற்றும் இயங்காத வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி கணக்கு உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தினரால் பயப்படுத்த முடியாமல் இருந்த தொகையை வங்கியில் இருந்து எடுப்பதற்கு இது உதவுகிறது. RBI New guideline for Inoperative Accounts

ரிசர்வ் வங்கியின் நோக்கம் என்ன?

இந்த நடவடிக்கைகள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு உரிமையான பணத்தை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருக்கும் ரூ.42,000 கோடிக்கும் மேற்பட்ட உரிமை கோராத வைப்பு நிதிகள் மீண்டும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கொண்டு வருவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோளாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share