ADVERTISEMENT

மீண்டும் கெனிசாவுடன் அமர்க்களமான எண்ட்ரி.. ஆர்த்திக்கு ரவி மோகன் பதிலடி?

Published On:

| By christopher

ravi mohan reply to arthi with kenisha

தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகரான ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ravi mohan reply to arthi with kenisha

எனினும் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இந்த ஜோடி விவகாரத்து பெறுவதாக அறிவித்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ADVERTISEMENT

தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் பட்டு வேட்டி சட்டையுடன் ரவி மோகன் கலந்துகொண்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இரண்டு பக்கங்களுக்கு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்த்தி. இதனையடுத்து பலரும் ரவிமோகனை சமூகவலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தனக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஆர்த்தியை வெறுப்பேற்றும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார் ரவி மோகன்.

ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மீண்டும் கெனிஷா உடன் ஜோடியாக வந்தார் ரவி மோகன்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் ரவிமோகன்.

எனினும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளது குறித்து கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share