ADVERTISEMENT

சினிமாவை அரசியலில் இருந்து விலக்கி விடுங்கள்.. விஜய் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன் – ரவி மோகன்

Published On:

| By Pandeeswari Gurusamy

சினிமாவை அரசியலில் இருந்து விலக்கி விடுங்கள். விஜயின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன் என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பராசக்தி பட நடிகர்களான சிவகார்த்திகேயன், ரவி மோகன் இருவரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், “டெல்லியின் மையப்பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது தமிழ் மக்கள் அனைவருக்கும் கௌரவம். இந்த பொங்கல் விழாவிற்கு என்னை அழைத்ததில் மகிழ்ச்சி. நான் பிரதமரை சந்தித்தேன். அவரின் ஆளுமை பிரம்மாண்டமானது. புன்னகையுடன் எங்களை வரவேற்றார்.

மக்கள் தாங்கள் விரும்புவதை எல்லாம் சொல்வார்கள். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அது ஒரு பொழுதுபோக்கு. அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அரசியலை அதிலிருந்து விலக்கி விடுங்கள். பொழுதுபோக்கு மனப்பான்மையுடன் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். நல்லது இருந்தால் எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் விட்டு விடலாம்.

ADVERTISEMENT

நான் விஜயின் தீவிர ரசிகனாக, சாத்தியமான அனைத்து இடங்களிலும் அவர் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share