ADVERTISEMENT

காஞ்சியில் பிறந்த ராவணன்.. சங்கரமடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜன. 22-ல் முற்றுகை போராட்டம்!

Published On:

| By Mathi

Ravanan Kanchi Sankara Mutt

காஞ்சிபுரம் சங்கரமடம் அமைந்துள்ள இடத்தில்தான் ராவணன் பிறந்தார்; அதனால் சங்கர மடத்தில் அகழாய்வு நடத்த கோரி ஜனவரி 22-ந் தேதி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை: ராமர் அயோத்தியில் பிறந்தால், ராவணன் பிறந்த இடம் இல்லாமலா போகும். அதுவும் தமிழரின் மெய்யியல் சிந்தனைக்கூடங்கள் தழைத்தோங்கிய காஞ்சியில் இராவணன் பிறக்காமலா இருந்திருப்பார்.

ADVERTISEMENT

காஞ்சியின் சங்கரமடத்தின் கிழே அகழ்வாராய்ச்சி செய்தால் உண்மை உலகிற்கு வருமென நாம் நம்புவது தவறா? ராமன் பிறந்த இடம் அயோத்தியின் பாபர் மசூதியின் கீழே என உச்சநீதிமன்றம் நம்புமெனில் காஞ்சிகாமகோடி சங்கரமடத்திற்கு கீழாக இராவணனின் பிறந்த இடம் இல்லாமலா போகும். ஆகவே காஞ்சி சங்கரமடத்தை தமிழர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு சங்கராச்சாரியார் அவரது பூர்வீக ஆந்திராவிற்கு சென்று தங்குவது நல்லது.

தமிழ்த் தேசியக் கூட்டணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜன 22-ந் தேதி ‘இராவணப்பெருவிழா’வை நடத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026ம் ஆண்டில் 22 ஜனவரியில் தமிழ்ப்பேரரசன் ராவணனுக்கு காஞ்சியில் கோட்டம் எழுப்ப உறுதி பூணுவோம் என தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பு அமைப்பான மே17 இயக்கம், விடுதலைதமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக, இதர சனநாயக அமைப்புகளின் சார்பாக அழைக்கிறோம்.

ADVERTISEMENT

அன்னிய காஞ்சிமடத்தை அகற்றிடுவோம்.
அருமை இராவணனுக்கு அமைத்திடுவோம் கோட்டம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share