ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி  : ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண க்ளிக்ஸ்!

Published On:

| By Kavi

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தானா ஆகியோரின் திருமணம் இன்று (பிப்ரவரி 26) ராஜஸ்தானில் நடைபெற்றது. 

‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இவர்களது ஜோடி மிகவும் பிரபலமடைந்ததால், நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைய வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் விரும்பினர். 

ADVERTISEMENT

அதேபோன்று, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலும் மலர்ந்தது. ஆனால் இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை. 

தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி இன்று கரம் பிடித்துள்ளது. 

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ‘ITC மெமெண்டோஸ்’ என்ற பிரம்மாண்ட அரண்மனை ஹோட்டலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. 

ஆனால் திருமணம் குறித்து புகைப்படமோ, வீடியோவோ வெளியாகாமல் இருந்தது, அவர்களது ரசிகர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

இந்தநிலையில், விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதில்,  “ஒரு நாள், அவளுடைய ஏக்கம் என்னை வாட்டியது.

அவள் அருகில் இருந்தால் இந்த நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றியது. 

அவள் எனக்கு எதிரே அமர்ந்து சாப்பிட்டால், அந்த உணவு இன்னும் முழுமையாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

நான் எங்கிருந்தாலும், நிம்மதியையும் அமைதியையும் உணர எனக்கு அவள் தேவைப்பட்டாள்.

அதனால்… என் உயிர் தோழியை… என் மனைவியாக்கிக் கொண்டேன்” என்று அழகாக பதிவிட்டுள்ளார். 

தற்போது #Theweddingofvirosh என்ற ஹேஷ்டேக் மூலம் இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share