இளம் ராப் இசைப் பாடகர் வேடன் (Rapper Vedan) மீது மருத்துவர் கொடுத்த புகாரில் அடிப்படையில் கேரளா போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த ராப் பாடகர் வேடன், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உணர்வை வெளிப்படுத்தி வருகிறார். ஈழத்து தாய்க்கும் கேரளாவை சேர்ந்தவருக்கும் மகனாக பிறந்த வேடன், கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

வேடன் மீது ஏற்கனவே பல புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் வேடன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கை கேரளாவின் திருக்காக்கரை போலீசார் பதிவு செய்துள்ளனர்.