தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி- காசி அருகே உள்ள பனாரஸ் செல்லும் Rameswaram–Banaras எக்ஸ்பிரஸ் ரயில் இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு அருகே உள்ள பனாரஸிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் வண்டி எண் 22535 புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திருச்சி மக்களவை தொகுதி எம்பி துரை வைகோ நேரில் மனு கொடுத்திருந்தார். நாடாளுமன்ற மக்களவையிலும் கேள்வி எழுப்பினார்.
தற்போது, ராமேஸ்வரத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் வண்டி எண் 22535 புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதாக துரை வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தில் யில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கையை நிறைவேற்றிய ரயில்வே அமைச்சகத்துக்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.