அருவருப்பா இருக்கு.. தவறு செய்து விட்டேன் – டாக்டர் ராமதாஸ் வேதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

Anbumani Vs Ramadoss

அன்புமணியை அமைச்சராக்கியது முதல் தவறு, பாமக தலைவராக்கியது இரண்டாவது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியினர் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். சேலத்தில் துக்கம் விசாரிக்க சென்ற ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் தரப்புக்கும் மற்றும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 52 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் இன்று (நவம்பர் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலில் நான் சில தவறுகளை செய்து விட்டேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. இரண்டாவது தவறு அன்புமணிக்கு கட்சித் தலைவர் பொறுப்பு கொடுத்தது. இதுபோல் பல தவறுகளை செய்த நிலையில் தற்போது அமைதியாக பாமகவை நடத்தி வருகிறேன் என்றார்.

அருவருப்பாக உள்ள அன்புமணி பேச்சு

ஆனால் தற்போதைய சூழலில் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என பொதுமக்களும், மற்ற கட்சியினரும் நினைக்கின்றனர். அந்த அளவிற்கு அன்பு மணியின் பேச்சும், செயலும் அருவக்கத்தக்க வகையில் உள்ளது. நடக்கும் அனைத்தையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

ADVERTISEMENT
நான் வளர்த்த பிள்ளைகள்

மேலும் என்னை ஐயா என்று அன்போடு அழைத்த சிலர் அங்கு சென்று என்னைப் பற்றி திட்டி பேசுகின்றனர். அந்த கும்பலில் இருக்கும் சிலரை தவிர மற்றவர்கள் நான் வளர்த்த பிள்ளைகள்.

எம்எல்ஏ க்களில் இரண்டு பேர் என்னோடு இருக்கிறார்கள். மூன்று பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய்விட்டார்கள்.

ADVERTISEMENT

கட்சியை நான் பெரிதாக வளர்த்து வந்த நிலையில் நான் வளர்த்த பிள்ளைகளை அழைத்து அன்புமணியும், சௌமியாவும் சில பொறுப்புகளை கொடுத்துள்ளனர். என் மீதும், ஜி.கே மணி மீது அவதூறு பரப்பி வருகிறன்றனர். பாமக-வில் அதிர்ச்சியூட்டும் பல விஷயங்களை பார்க்கிறேன்.

ஆரோக்கியமான அரசியல் அல்ல

கத்தி, வீச்சருவாள் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குகின்றனர். என் தலைமையில் நடந்த போராட்டங்களில் வன்முறையோ மோதலோ நடைபெற்றதில்லை என தெரிவித்துள்ளார். இதையெல்லாம் நினைத்து பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை தான் அவர் Decent and Development Politics என சொல்லி வந்தாரா எனத் தெரியவில்லை. இனி இத்தகைய வன்முறை விஷயங்களை அந்த கும்பல் கைவிட வேண்டும். என்னுடைய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அருள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இது ஆரோக்கியமான அரசியல் அல்ல. என்னுடைய பாசமுள்ள கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணியும், அவரின் மனைவி சௌமியா அன்புமணியும்தான் ” என்று ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share