பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் கட்சியினரிடையே நாள்தோறும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. ramadoss ordered for big protest at villupuram
இருவரும் தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு பதவி அளித்தும், எதிரானவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட தலைநகரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதனையொட்டி தனது மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அதன்படி ஆர்ப்பாட்டத்திற்கு வடமாவட்டங்களில் குறிப்பாக கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 25 ஆயிரம் பேர் திரட்ட வேண்டும் என்றும்,
அதற்காக எந்தெந்த வாகனத்தில், எத்தனைப் பேர் வருகின்றனர் என்ற விவரங்களை தனக்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்றும்,
இந்த ஆர்ப்பாட்டம் விழுப்புரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நடைபெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் அவருக்கு தனது பலத்தை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபிப்பார் என்கின்றனர் அன்புமணி தரப்பு பாமகவினர்.