ADVERTISEMENT

தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிராக ராமதாஸ் வழக்கு! 

Published On:

| By Kavi

தன்னை பாமக தலைவராக பதிவு செய்யும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில் அன்புமணியை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது. 

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிராக ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில் பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டால் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share