பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அக்கட்சியின் (செயல்) தலைவர் அன்புமணியை நீக்குவதற்காக ஜூலை 8-ந் தேதி கட்சியின் செயற்குழுவை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டியுள்ளார் என்கின்றன பாமக வட்டாரங்கள். Ramadoss Anbumani
பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் பலரும் பொறுப்புகளில் இருந்து டாக்டர் ராமதாஸால் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அதே பதவிகளில் தொடருவதாக அன்புமணி கூறி வருகிறார்.
இந்த நிலையில் தாம் நியமித்த புதிய நிர்வாகிகளைக் கொண்ட செயற்குழுக் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் ஜூலை 8-ந் தேதி திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கூட்டியுள்ளார்.
தைலாபுரத்தில் ஜூலை 8-ல் நடைபெறும் பாமக செயற்குழுக் கூட்டத்தில், அன்புமணியை கட்சித் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் அதிரடி முடிவு எடுக்கப்பட இருக்கிறதாம்.
மேலும் அன்புமணிக்கு பதிலாக பாமகவின் புதிய செயல் தலைவராக தற்போது கவுரவத் தலைவராக இருக்கும் ஜிகே மணியை நியமிக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தாமே பாமகவின் தலைவர் என ராமதாஸ் ஏற்கனவே அறிவித்துள்ளதால் செயல் தலைவராக ஜிகே மணியை நியமிக்க இருக்கிறாராம்.