தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு!

Published On:

| By Kavi

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு  நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த மாதத்தில், முஸ்லிம்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் சஹர் உணவை உட்கொண்டு, சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் நீர் அருந்தாமல் நோன்பு மேற்கொள்வார்கள்.

இந்தநிலையில் . பிப்ரவரி 18, 2026 அன்று மாலை தமிழகத்தில் பிறை நிலவு தென்பட்டதை அடுத்து, தமிழக அரசின் தலைமை காஜி  முஹ்யீத்தின் பாகவி நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என்று அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ரமலான் மாதம் வழக்கமாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். அதன்படி, மார்ச் 18 அல்லது 19 அன்று ரமலான் முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share