தமிழகத்தில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Published On:

| By Mathi

Ramadan Celebrations

இஸ்லாமியப் பெருமக்களின் ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை இன்று மார்ச் 21-ந் தேதி தமிழ்நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஷவ்வால் மாதத்திற்கான பிறை மார்ச் 19 அன்று தென்படாத காரணத்தினால், ரமலான் மாதம் 30 நாட்களாகப் பூர்த்தியடைந்து, சனிக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் வீடுகளிலும், மசூதிகளிலும் ரமலான் கொண்டாட்டம் களைகட்டியுள்ளன.

ADVERTISEMENT

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இது பெருநாள் கொண்டாட்டங்களுக்கு மேலும் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சென்னையில் திமுக சிறுபான்மையினர் அணி ஏற்பாடு செய்த பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு தனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் “திமுகவுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான உறவு பிரிக்க முடியாதது” என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

சென்னை தீவுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஈத் தொழுகை நடைபெற்றது.
கோவை குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் போன்ற இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

மதுரை கோரிப்பாளையம் தர்கா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இதேபோல தமுக்கம் மைதானத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் அமீர் பங்கேற்றார். நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share