‘ராட்சசன்’ ராம்குமாரின் அடுத்த படைப்பு… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

Published On:

| By Selvam

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘இரண்டு வானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ram kumar next film

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு இயக்குனராக அறியப்பட்டார் ராம் குமார். அடுத்ததாக 2018-ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ராம் குமார் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.

இந்தநிலையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் ராம் குமார் இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாள நடிகை மமிதா பைஜூ விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷ்ணு விஷால், மமிதா பைஜூ இருவரும் மலைகளுக்கு நடுவே எதிரெதிர் துருவங்களில் மேகக்கூட்டங்களின் மீது உட்கார்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ராட்சசன்’ பாணியில் இப்படமும் த்ரில்லர் ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ram kumar next film

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share