மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக எல்.கே.சுதீஷ் (L.K. Sudhish) போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் வரலாற்றில் முதல் முறையாக அக்கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் உடன்பிறந்த தம்பி எல்.கே.சுதீஷ்.
2006-ம் ஆண்டு குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் சுதீஷ்
2009 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி, 2014 மக்களவைத் தேர்தலில் சேலம், 2019-ல் மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ஹ்டார் சுதீஷ்.
தற்போது திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் எல்.கே. சுதீஷ்.
