ADVERTISEMENT

கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது?

Published On:

| By Kavi

கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’.

ADVERTISEMENT

நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

கண்ணப்பா -அமேசான் பிரைம், சரண்டர் – சன் நெக்ஸ்ட், பிளாஸ்க் – மனோரமா மேக்ஸ் ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share