ADVERTISEMENT

தூய்மை பணியாளரின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்

Published On:

| By Pandeeswari Gurusamy

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டி இன்று (பிப்ரவரி 3) நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, குப்பையில் கிடந்த 45 சவரன் மதிப்பிலான தங்க நகைகளைக் கண்டெடுத்தார்.

ADVERTISEMENT

சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பத்மா காவல்துறையிடம் ஒப்படைத்தார். பத்மாவின் இந்தச் செயலுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர்.

ஏற்கனவே நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தங்க நகைகளை தொலைத்ததாக முன்பே புகார் அளிக்கப்பட்டிருந்தது. விசாரணையில்,அவர் அளித்த ஆவணங்கள் சரிபார்த்த பின்னர், நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT

பத்மாவின் நேர்மையைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில், இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்த நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share