உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று காலை கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் ராமதாஸை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இன்று(அக்டோபர் 7) நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சூழலில் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ராமதாஸிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
மேலும் மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்த ரஜினி விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.