தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2-ந் தேதி வரை மழை நீடிக்கும் (Weather-Rain) என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது குஜராத்- வடக்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஜூலை 28 மற்றும் நாளை ஜூலை 29 ஆகிய நாட்களில் இடி- மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று, மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசக் கூடும். அடுத்த 7 நாட்களுக்கு- ஆகஸ்ட் 2-ந் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.