இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான 3058 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, ரயில்வேயின் NTPC (Non-Technical Popular Categories) இளங்கலை நிலை ஆட்சேர்ப்பு 2025 (CEN 07/2025) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கிளார்க், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சு செய்பவர் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
- மொத்த காலியிடங்கள்: 3058
- பதவிப் பிரிவுகள்:
- Commercial Cum Ticket Clerk: 2424 காலியிடங்கள்
- Accounts Clerk cum Typist: 394 காலியிடங்கள்
- Junior Clerk cum Typist: 163 காலியிடங்கள்
- Trains Clerk: 77 காலியிடங்கள்
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Accounts Clerk cum Typist மற்றும் Junior Clerk cum Typist போன்ற தட்டச்சு சார்ந்த பணிகளுக்கு, கணினியில் ஆங்கிலம் (30 WPM) அல்லது இந்தி (25 WPM) தட்டச்சு செய்யும் திறன் கட்டாயமாகும்.
விண்ணப்பதாரர்களின் வயது 01.01.2026 அன்று நிலவரப்படி 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 28, 2025 அன்று தொடங்கி, நவம்பர் 27, 2025 அன்று முடிவடையும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 29, 2025 கடைசி நாள்.
- விண்ணப்பக் கட்டணம்:
- பொது/OBC/EWS பிரிவினருக்கு: ரூ. 500 (முதல்நிலை CBT தேர்வில் பங்கேற்றால் ரூ. 400 திருப்பித் தரப்படும்).
- SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/சிறுபான்மையினர்/பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு (EBC): ரூ. 250 (முதல்நிலை CBT தேர்வில் பங்கேற்றால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும்).
சம்பளம் மற்றும் தேர்வு முறை
தேர்வு செய்யப்படும் Commercial Cum Ticket Clerk பதவிக்கு ஆரம்பகால சம்பளம் ரூ. 21,700 ஆகவும், பிற கிளார்க் பதவிகளுக்கு (Junior Clerk – Typist, Accounts Clerk – Typist, Trains Clerk) ரூ. 19,900 ஆகவும் 7வது ஊதியக் குழுவின் நிலை 03 இன் கீழ் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை மொத்தம் ஐந்து நிலைகளைக் கொண்டது:
- முதல் நிலை கணினி வழித் தேர்வு (CBT 1)
- இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (CBT 2)
- தட்டச்சு திறன் தேர்வு / கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (CBAT) (பதவிக்கு பொருந்தும் வகையில்)
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (CEN-07/2025) முழுமையாகப் படித்து அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தமிழக இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ரயில்வேயில் ஒரு நிலையான பணியைப் பெறலாம்.
