மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை (ஜனவரி 13) தமிழ்நாடு வருகை தருகிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று மாலை 3 மணிக்கு வருகை தருகிறார்.
டெல்லியில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு விமானம் மூலம் வருகை தரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர் மார்தோமா நகர் பகுதியில் வந்து இறங்குகிறார்.
கூடலூர் பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் கேரளா மாநிலம் திருச்சூருக்கு ராகுல் காந்தி புறப்பட்டுச் செல்கிறார்.
ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
