டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் எங்கே? – தேர்தல் ஆணையத்திடம் ராகுல் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்!

Published On:

| By christopher

Rahul Gandhi raises 5 imp questions to the ECI

நடந்து முடிந்த மக்களவை மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் ராகுல்காந்தி இன்று (ஆகஸ்ட் 8) தேர்தல் ஆணையத்திற்கு 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று நேற்று டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, கர்நாடகவில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

மேலும், “இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான ஃபார்ம் 6 (Form 6) ஆவணத்தை 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. க

இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்குமானால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்துவிட முடியும்” எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

அதனையடுத்து பெங்களூருவில் இன்று தேர்தல் வாக்கு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தை நோக்கி ராகுல்காந்தி ஐந்து முக்கிய கேள்விகளை எழுப்பினார்.

அவர், “தேர்தல் ஆணையத்திற்கு 5 கேள்விகள் உள்ளன – அதற்கான பதில்களைக் கேட்க நாடு காத்துக்கொண்டிருக்கிறது.

1. எதிர்க்கட்சிகளுக்கு டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை? நீங்கள் எதனை மறைக்கிறீர்கள்?
2. சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன அது ஏன்? யாரின் உத்தரவில் அது நடக்கிறது?
3. போலி வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருக்கிறது அது ஏன்?
4. எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் ஏன்?
5. பாஜகவின் ஏஜெண்டாக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? எங்களுக்கு தெளிவாக சொல்லுங்கள்.

இந்தியாவின் ஜனநாயகம் விலைமதிப்பற்றது – அதனை திருடினால் விளைவுகள் மோசமாக இருக்கும். தற்போது பொதுமக்களே இது குறித்து பேசுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share