திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த். எங்களுக்காக 1996-ல் குரல் கொடுத்தவர். அவரை மிரட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “திமுக மிரட்டியதால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதியிடம் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது,“ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் மன்றம் உள்ளது. அவரை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அன்புக்குத்தான் ரஜினிகாந்த் அடிபணிவார். மிரட்டலுக்கு அவர் அடிபணியக்கூடியவர் அல்ல என்பது எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.
