ராகி முதல் பீட்ருட் வரை : பெண்கள் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை லிஸ்ட்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

rahi to Pumpkin seeds List of must have foods for women

பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்களைக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறார்கள். இதன் காரணமாக பெண்கள் மத்தியில் பொதுவாக ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுகிறது. குடும்பப் பொறுப்புகளில் மும்முரமாக இருப்பதால், அவர்கள் தங்களை உடல்நலனை புறக்கணிக்கிறார்கள். இது ஹார்மோன் சமநிலையின்மை, பலவீனம் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. பெண்கள் வீடுகளையும் குழந்தைகளையும் மட்டும் பார்த்துக் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவது மிகவும் முக்கியம். பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்க உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

ராகி

ராகி என்பது கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறை, எந்த நேரத்திலும் ராகியை சாப்பிடலாம். ராகியை (ragi benefits) ரொட்டி செய்து சாப்பிடலாம், ராகி உருண்டை அல்லது அல்வா வடிவிலும் சாப்பிடலாம். எலும்புகளை வலுப்படுத்தவும், ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கவும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் ராகி மிகுந்த நன்மையை அளிக்கிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (amla for immunity) அதிகரிக்க உதவுகிறது. இது வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. இதை ஒரு நாளைக்கு ஒரு முறை ஜூஸ், ஊறுகாய், சட்னி வடிவில் சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காயை உட்கொள்வது சோர்வைக் குறைத்து, ஆற்றலை அதிகரித்து, சருமத்தையும் முடியையும் வலுப்படுத்துகிறது.

ADVERTISEMENT

சியா விதைகள்

சியா விதைகளில் கால்சியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பலவீனத்தைப் போக்கி, உடல் எடையைக் (Chia seeds for health) கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அவற்றை வெறும் விதைகளை மென்று சாப்பிடலாம் அல்லது லட்டுகளில் கலந்து சாப்பிடலாம்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 நிறைந்துள்ளது. இது மூளையின் நரம்புகளை வலுப்படுத்தி, பலவீனத்தைக் குறைத்து, மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது இதய நோய் (heart disease) மற்றும் பிசிஓடி போன்ற பிரச்சனைகளுக்கும் நன்மை பயக்கும். எனவே, பெண்கள் இதைத் தினமும் உட்கொள்வது மிகவும் முக்கியம்.

ADVERTISEMENT
பூசணி விதைகள்

பூசணி விதைகள் எளிதில் கிடைக்கக்கூடியவை மற்றும் மெக்னீசியம், துத்தநாகம் நிறைந்தவை. இவை ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கவும், தைராய்டு கட்டுப்பாட்டிற்கும், தசை ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை. தினமும் 1 ஸ்பூன் பூசணி விதைகளைச் (Pumpkin seeds) சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டைச் சரிசெய்ய உதவும்.

வால்நட்

வயது அதிகரிக்கும்போது ​​மூளையும் நரம்புகளும் பலவீனமடையத் தொடங்கி, முழங்கால் மற்றும் மூட்டுகள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. வால்நட்டில் (Walnut) உள்ள ஒமேகா-3 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மூளை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தி, மூட்டுப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றன. எனவே, தினமும் காலையில் இதைச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

பீட்ரூட்

 பெண்களுக்கு பொதுவாக ரத்தசோகை காணப்படுவதால் ரத்தத்தை அதிகரிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்வது மிகவும் முக்கியம். பீட்ரூட்டை (beetroot benefits) குழம்பு, பொறியல், ரொட்டி, சாலட் வடிவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலில் ஆற்றலைப் பராமரிக்கவும், பலவீனத்தை நீக்கவும் உதவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share