தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார்பாக ராமநாதபுரத்தில் பிப்ரவரி 10-ந் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியதாவது: கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என தனிப்பட்ட நபர்கள் பேசுவதற்கு எல்லாம் திமுக பதில் சொல்ல முடியாது. திமுக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் ஒரு நல்ல இணக்கமான உறவு இருக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்துதான் செயல்படுவோம். திமுகவின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவும் சீக்கிரமே அறிவிக்கப்படும்.
அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அவங்க கோரிக்கைகளை வலியுறுத்த இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறாங்க. அதனாலதான் போராடுறாங்க. முதலமைச்சர் அவங்களை அழைச்சுப் பேசி, ரொம்ப வருஷமா தீர்க்க முடியாம இருந்த பல விஷயங்களுக்குத் தீர்வு கண்டு வருகிறார்.

விவசாயிகள், நெசவாளர்கள்னு நிறைய அமைப்புகள், அப்புறம் சில மத அமைப்புகளைச் சேர்ந்தவங்க வந்து எங்களைச் சந்திச்சு அவங்க கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க. அதுல எதெல்லாம் தேர்தல் அறிக்கையில கொண்டு வர முடியுமோ, அதை நிச்சயமா நாங்க கொண்டு வருவோம். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

எடப்பாடி குறித்து கமெண்ட்
இந்த சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர், “நித்தம் நித்தம் பொய் சொல்வதாக எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பற்றி கூறியிருக்கிறாரே” என கேள்வி கேட்டார்.
இதற்கு, “யார்? அவரைப் பற்றி சொல்கிறாரா?” என சிரித்தபடியே பதில் சொன்னார் கனிமொழி.
