ஒடிஷா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்; 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். Puri Rath Yatra
ஒடிஷாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ரத யாத்திரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளன்ர்.
இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
முன்னதாக பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்களில் சுமார் 600 பேர் கடுமையான வெயில் உள்ளிட்டவற்றால் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.