எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல திமுகவை தீய சக்தி.. தீய சக்தி என்றுதான் சொல்வேன்; அண்ணா, எம்ஜிஆர் பெயருக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார்.
ஈரோடு பெருந்துறை சரளையில் இன்று டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
மஞ்சள்… பொதுவா நல்ல காரியங்கள் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி, இந்த மஞ்சள எடுத்து வச்சுதான் ஸ்டார்ட் பண்ணுவாங்க.. நம்ம வீட்டுல கூட நம்ம அம்மா, அக்கா, தங்கைகள் நாம நல்லா இருக்கனும்கிறதுக்காக மஞ்சள் புடவையை கட்டிகிட்டுதான் வேண்டிக்குவாங்க..
அந்த மஞ்சள்னாலே தனி Vibeதாங்க.. நம்ம கொடியில கூட அந்த vibrant ஆன, energetic-ஆன மஞ்சள் இருக்குமே.. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையற பூமிதான் இந்த ஈரோடு பூமி… இங்க வந்து மஞ்சளப் பத்தி பேசாம வேற எங்க போய் பேசுறது? அதுமட்டுமல்ல இங்கே ஒரு மகத்தான மாமனிதரப் பத்தி பேசியே ஆகனும்.

காலிங்கராயன் அணை, கால்வாய்
இந்த ஈரோடு மண், விவசாயத்துக்கும் பேர்போன மண்… இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கியமான கவசமா இருக்கறது என்ன தெரியுமா? காலிங்கராயன் அணை, காலிங்கராயன் கால்வாய்.
காலிங்கராயன் அணை கட்டினதுலயும் கால்வாய் வெட்டினதுலயும்
உயிரான உணர்வுப்பூர்வமான நிறைய விஷயங்கள் இருக்கு. அப்படி அந்த ப்ராசஸ்ல. அவரு அந்த அணையைக் கட்டும் போதும் கால்வாய் வெட்டும் போதும் ரொம்ப சோர்வு அடைஞ்சுட்டாராம்.. அப்ப அவங்க அம்மா அதைப் பார்த்துட்டு சொன்னாங்களாம்.. மகனே! காலிங்கா… தயிர் வித்த காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்குது… மோர் வித்த காசு முகடுவரைக்கும் இருக்குது… அதை எடுத்துக்கிட்டுப் போயி அணையக் கட்டுயா… கால்வாயை வெட்டுயான்னு தைரியம் கொடுத்தாங்களாம்.. பெத்த அம்மா கொடுக்கற அந்த தைரியம் இருக்கு பாருங்க அதைத் தாண்டி வேற எதுவுமே கிடையாதுங்க..
ஒரு மனுஷனால எதையும் எதையும் சாதிச்சுக்காட்ட முடியும். அப்படி ஒரு தைரியத்தைத்தான் இப்ப நீங்க என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், தம்பிகள், நண்பா, நண்பிகள், தோழர்கள் எல்லோரும் எனக்கு அதே தைரியத்தைக் கொடுத்திருக்கீங்க.. அதே தைரியத்தை.. துணையா என்கூட நிக்கிறீங்க..
இதை எப்படி நம்ம பிரிச்சுவிடலாம்.. இதை எப்படி நம்ம கெடுக்கலாம்.. என்னவெல்லாம் நம்ம விஜய் மீது அவதூறு சொல்லி மக்களை நம்ப வைக்கலாம்.. என்ன எல்லாம் சூழ்ச்சிகள் செஞ்சி மக்களை நம்ப வைக்கலாம்.. இப்படி
சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பொழப்ப நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டங்கள் இதைத் தொடர்ந்து செஞ்சுகிட்டுதான் இருக்குது..

10 வயசுல சினிமாவுக்கு வந்தேன்
ஆனா அவங்களுக்கு தெரியாது… இது இன்னிக்கு நேத்து வந்த உறவு இல்லை கிட்டதட்ட 30, 33 வருஷத்துக்கு மேல இருக்கிற உறவு.. ஏன் நான் சினிமாவுக்கு வந்தப்ப எனக்கு வயது 10. அப்ப முதல் இந்த உறவு ஸ்டார்ட் ஆகி போய்கிட்டு இருக்குன்னு அவங்களுக்கு தெரியாம போச்சு
அதனால நீங்க என்ன பண்ணனாலும் என்ன டிரை பண்ணனாலும் எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக வந்திருக்க இந்த விஜய்ய, இந்த விஜிய மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டீங்க…மக்கள் கூடவே நிக்கறாங்க…கூடவே நிப்பாங்கன்னு அவங்களுக்கு தெரியாம போச்சு.
என்னப்பா..நிப்பீங்க இல்லை? உங்களை நம்பித்தான்பா வந்திருக்கேன்..

காலிங்கராயன் அணை, கால்வாய் வெட்டிய கதை
அதான் அதான் இந்த சத்தம்தான்.. வாழ்நாள் பூராம் உங்களுக்கு நன்றியோடவே இருப்பேன்… இப்ப நம்ம காலிங்கராயன் அவர்கள் அணைய கட்டுறதுக்காக பவானிக்கு போய் பார்க்கும் போது ஒரு இடத்துல பாம்பு வந்து உட்கார்ந்துச்சாம்..படுத்துச்சாம்… அது படுத்த இடத்துலதான் அணையை கட்ட ஸ்டார்ட் பண்ணினாராம்.. அப்புறம் அந்த பாம்பு வளைஞ்சி நெளிஞ்சி போன இடத்துல எல்லாம் கால்வாய் வெட்டினாருன்னு சொல்லி சில வாய்மொழிக் கதைகள் எல்லாம் சொன்னாங்க..
தண்ணிய சேமிச்சு வச்சு குடிக்கறதுக்கும் விவசாயத்துக்கும் வழிவகுக்கிறது எவ்வளவோ பெரிய நல்ல விஷயம்.. சோ இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் செஞ்சுட்டு கதைகள் சொன்னா பரவாயில்லை. எதுவுமே செய்யாம கதைகளை மட்டும் அடிச்சுவிடுறது.. எப்படி?
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்த இன்னும் விரிவுபடுத்தினா அந்த மூணு மாவட்டத்துல இருக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு எவ்வளவு பிரயோஜனமா இருக்கும்? எத்தனையோ லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடத்துனா எவ்வளவு பிரயோஜனமா இருக்கும்? ஏன் அதை எல்லாம் பண்ணமாட்டேங்குறீங்க?
வள்ளுவர் கோட்டத்துக்கு காட்ற அக்கறைய இங்க மக்கள் வாழ்வாதாரத்துல கொஞ்சம் காடலாம்ல.. ஏன் காட்ட மாட்டிங்கிறீங்க? இங்க என்ன கவர்மெண்ட் நடத்துறாங்களா? இல்ல கண்காட்சி நடத்துறாங்களா?
இந்த 21ஆம் நூற்றாண்டுல மக்கள பத்தி எதுவுமே யோசிக்கறதலை.. ஆனா அந்த காலத்துலயே எல்லாத்தையும் யோசிச்ச மக்களைப் பத்தி, குடிக்கிற தண்ணியைப் பத்தி, விவசாயத்தை பத்தி அணை கட்டுற பத்தி கால்வாய் வெட்டுற பத்தி.. இதை எல்லாம் எங்க இருந்து? பவானியில இருந்து நொய்யலாறு வரைக்கும் கால்வாய் வெட்டி, இதை எல்லாம் பத்தி யோசிச்ச காலிங்கராயன் அவர்களுக்கு கோடி கும்பிடு போட்டாலும் பத்தாதுங்க…
ஈரோடு கடப்பாரை தந்தை பெரியார்
இப்படி அந்த காலத்துல இருந்த ஒரு ஹீரோவ பத்தி பேசிட்டு இந்த காலத்துல 20ஆம் நூற்றாண்டுல இருந்த ஹீரோவப் பத்தியும் பேசியும் ஆகனும்ல
ஒருத்தர் இளகிய மனம் கொண்ட ஹீரோன்னா, இன்னொருத்தர் இரும்பு மாதிரி அயர்ன்மேன்.. யெஸ் நம்ம ‘ஈரோடு கடப்பாரைதான்’.. ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே திருப்பி போட்ட சீர்திருத்த நெம்புகோல்…ஈரோடு மாவட்டத்துல பிறந்த அவருதான் இந்தியாவுக்கே இட ஒதுக்கீடு சம்பந்தமான அரசியல் சட்டத்த திருத்தறதுக்காக போராட்டத்தை நடத்தினாரு யாரு? நம்ம தந்தை பெரியாரு..

100 வருசத்துக்கு முன்னாடியே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேணும்னு கேட்டவரு.. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஒரு ஆச்சரியத்துடன் பார்க்கக் கூடிய ஒரு மனிதர்.. நம்முடைய கொள்கைத் தலைவரு..
அண்ணா, எம்ஜிஆர் யாருக்கும் உரிமை இல்லை
அப்ப அண்ணாவும் எம்.ஜி.ஆரும் யாரு? பெரியார் அவர்கள்கிட்ட இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகள எடுத்துக்கிட்டோம்.. அவரை ஃபாலோ அப் பண்ற அவரை வழிகாட்டியாக ஏத்துகிட்ட அண்ணா அவர்கள்கிட்ட இருந்தும் எம்.ஜி.ஆர் அவர்கள்கிட்ட இருந்தும் தேர்தல் அணுகுமுறைய எடுத்துக்கிட்டோம்…
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டோட சொத்து! அவங்கள பயன்படுத்துறத பத்தி யாரும் இங்க கம்ப்ளெய்ண்ட் எல்லாம் பண்ண முடியாது.. அண்ணா எங்களுடையது.. எம்ஜிஆர் எங்களுடையது.. நீங்க எல்லாம் எடுத்துக்க கூடாதுன்னு அப்படி எல்லாம் யாரும் இங்க அழுதுகிட்டு இருக்க முடியாது.. சொல்லிப்புட்டேன்..
அதனால நாங்க ஒரு வழியில அரசியல் செஞ்சுகிட்டு போய்கிட்டு இருக்கிறோம். உங்களுக்குதான் டிவிகே ஒரு பொருட்டே இல்லல்ல… அப்றம் ஏன் கதறுறீங்க?
அப்புறம் ஏன் ஆளாளுக்கு அங்க போய்ட்டு இங்க போய்ட்டு புலம்பித் தள்ளிகிட்டு இருக்கீங்க
பயமில்லாத மாதிரி நடிப்பு
இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை.. எனக்கு பயம் இல்லை.. அப்படின்னு சத்தமா சவுண்ட விட்டுகிட்டே சத்தமா பாட்டுப் பாடிக்கிட்டேcஇன்ன பசங்க நடுங்கிட்டே நடந்து போவாங்க இல்லையா.. அந்த மாதிரி இருக்குது..
முதல்ல மண்டையில இருக்குற கொண்டைய மறைங்க சார்… சும்மா மாறு வேஷத்துல மரு வச்சிக்கிட்டு, மீடியா ஆளு ரேடியோ ஆளுன்னு.. இவங்க ஆளுகளையே மாத்தி மாத்தி அனுப்பிக்கிட்டு இருக்கிறீங்க.. இது எல்லாம் மக்களுக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா?
காசு.. மாஸு.. பஞ்ச் டயலாக்
மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்சுகிட்டுதான் இருக்காங்க…அதனால சொல்றேன்.. உங்களுக்கு நீங்க கொள்ளை அடிச்சி வச்சிருக்கற காசுதான் துணை… ஆனா எனக்கு… என்மேல எல்லையில்லா பாசம் வச்சிருக்கற இந்த மாஸ்தான் துணை!
இப்படி நமக்கு துணையா இருக்கிற ஈரோடு மக்களுக்காக நாம குரல் கொடுக்கலாம்னு இப்ப வந்திருக்கேன்… சரி விஷயத்துக்கு வருவோம்…
பெரியார் பெயரை சொல்லி கொள்ளை
பெரியார் அவர்கள் கிட்ட இருந்த அந்த செல்வாக்கையும் , அந்த பதவிகளையும் அந்த பவரையும் வெச்சிகிட்டு அவரு என்ன சொன்னாரு தெரியுமா? ”இவ்வளவு செல்வாக்கு, பதவிகள், இவ்வளவு பவர் இருந்தும் நான் ஒரு அஞ்சு பைசா காசு சம்பாதிச்சு இருப்பேனா? எனக்கோ என் குடும்பத்துக்கோ பட்டங்கள் வேணும் பதவி வேணும்னு ஏதாவது கேட்டிருப்பேனா? ஏதாவது லாபம் பாத்திருக்கேனா?…
இலல எதுக்காவது ஆசைப்பட்டிருப்பேனா”ன்னு கேட்டார் பெரியார்.
ஆனா அவரு பேர சொல்லிகிட்டு அவரு கொள்கைய ஃபாலோ பண்றதா சொல்லிகிட்டு இப்ப ஆட்சியில இருக்கவங்க என்ன எல்லாம்…செய்யறாங்கன்னு அதனாலதான் சொல்றோம்.. பெரியார் பேர சொல்லிக்கிட்டு தயவு செஞ்சு கொள்ளை அடிக்காதீங்கய்யா.. தயவு செஞ்சு அவரு பேரை சொல்லிகிட்டு கொள்ளை அடிக்காதீங்க.. பெரியார் பேர சொல்லி கொள்ளை அடிக்கற இவங்கதான் நம்மோட அரசியல் எதிரி..
மக்களே நீங்க சொல்லுங்க.. நம்மோட அரசியல் எதிரி யாரு? நம்மோட கொள்கை எதிரி யாரு?
ரிப்பீட்டு..
நம்முடைய அரசியல் எதிரியாரு?
நம்முடைய கொள்கை எதிரி யாரு?
உங்களுக்கு புரியதுல்ல.. எனக்கு அது போதும்யா.. எனக்கு வேற எதுவுமே தேவை இல்லை..
களத்தில் இல்லாதவங்களை எதிர்க்கலை
உங்களுக்கு நம்மளைப் பத்தி நம்முடைய அரசியலைப் பத்தி நீங்க எல்லாரும் என்னோட என்னோட அரசியலோட கனெக்ட்டடா இருக்கீங்கன்னு தெளிவா தெரியுது.. அதனால எனக்கு அது போதும். அதனாலதான் எதிரிகள் யாருன்னு சொல்லிட்டு களத்துக்கு வந்திருக்கிறோம். அதனால அவங்கள மட்டும்தான் களத்துல எதிர்ப்போம்… அதுவும் அந்த எதிரிகளில் யாரு இப்ப இங்க 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்துல இருக்காங்களோ அவங்கள மட்டும்தான் எதிர்ப்போம்… சும்மா களத்துலயே இல்லாதவங்களயும் களத்துக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவங்களயும் எதிர்க்கற ஐடியா எல்லாம் இல்ல பாஸு. நீங்க கேட்கிறீங்கன்னு எதிர்த்துகிட்டு இருக்க முடியாது பாஸு. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு..
எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள்… வந்த உடனே நீட்ட ரத்து செய்வோம்… கல்விக்கடன ரத்து செய்வோம்… கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100ரூபா தருவோமனு அடிச்சுவிட்டுட்டு இன்னைக்கு வரைக்கும் இதை எல்லாம் சொன்னாங்களே.. செஞ்சாங்களா?
ஈரோட்டு மக்கள் கோரிக்கைகள்
இங்க எப்பவுமே இப்படித்தான்.. சொல்றது ஒன்னு..செய்யுறது ஒன்னு. திமுகவும் பிரச்சனைகளும் பெவிக்கால் போட்டு ஒட்டுன பிரண்ட்ஸ் மாதிரி. ஒன்னில் இருந்து ஒன்னை பிரிக்கவே முடியாது.
இப்ப ஈரோடு பகுதியில இருக்கிற பிரச்சனைகளைப் பத்தி பேசுவோம். பெரியார் பேரு மட்டும் சொல்லிகிட்டு எப்படி அவரோட கொள்கைகளுக்கு எதிராக செயல்படுறாங்களோ அப்படித்தான் இந்த மஞ்சள் நகரத்தோட மஞ்சளுக்கும் ஒன்னும் பண்ணலை.. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்னும் பண்ணலை..
ஆராய்ச்சி மையம், சிறப்பு மையம்ன்னு கோடி கோடியா டெண்டர் விட்டாங்க…
பேருக்கு கட்டிடத்தை கட்டுனாங்க… ஆனா, உலகமே போட்டி போட்டு வாங்குற மஞ்சள மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய அதாவது அதோட Value increase – பண்ணி நம்ம விவசாயிகளுக்கும், இந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்ய இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்காங்கன்னு யோசிச்சுப் பாத்தா ஒரு பெரிய ஜீரோதான்.
கரும்பு, நெல்லுக்கு அரசாங்கம் விலை பிக்ஸ் பண்றாங்க… அதையும் ஒழுங்கா பண்றதில்ல… ஒவ்வொரு முறையும் பிரச்சினை…. அங்க நெல்ல கொள்முதல் செய்யுறதுல ஊழல்… சரி நாம கஷ்டப்பட்டு விளைய வெச்சது வீணா போகக்கூடாதுன்னு நினைச்சு நம்ம விவசாயிகள் கேக்குற லஞ்சத்த கொடுத்தாலும் அப்புறமும் கொள்முதல் ஒழுங்கா நடக்கிறது இல்ல… அதையும் தாண்டி, ஏதோ ஒரு விலை விவசாயிகளுக்கு கிடைக்குது…
அப்படிலாம் இல்லாம, ஒழுங்கா நேர்மையா நம்ம மஞ்சளுக்கும் நியாயமான விலைய பிக்ஸ் ண்ணி, தரமான விதைகளைக் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க.? இதை எல்லாம் யோசிக்கிறதுக்கு அவங்களுக்கு நேரமே இல்லை.
24X 7 அவங்க யோசனை என்ன தெரியுமா? இந்த விஜய்யை எப்படி மடக்கலாம்? தமிழக வெற்றிக் கழகத்தை எப்படி எல்லாம் முடக்கலாம்.. அப்படித்தான் அவங்களோட சிந்தனையே 24X 7
வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக
எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி, நம்ம காலிங்கராயர்,.. நதிகளின் இணைப்புக்கு முன்னோடியா இருந்தாரு… பவானி ஆத்துல வர்ற அதிகமான தண்ணிய அணை கட்டி தேக்கி, தண்ணீர் வறட்சியான பகுதிகளுக்கு அனுப்புனாரு… ஆனா, இன்னைக்கு இவ்வளவு நவீன வசதிகள் இருந்தும், இவ்வளவு சயின்ஸ் வளர்ச்சிகள் இருந்தும் இவ்வளவு டெக்னாலஜி வளர்ச்சிகள் இருந்தும் அவங்க வாக்குறுதிகளில்ல ஒன்னு கொடுத்தாங்க.. பவானி – நொய்யலாறு – அமராவதி ஆறு இணைப்புத் திட்டத்துக்கு
ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடல…(வாக்குறுதி நம்பர் 103). சொன்னாங்களே செஞ்சாங்களா?
சரி… இதாவது ஒரு பெரிய புராஜக்ட்னு வைங்க…ஆறுகள சுத்தப்படுத்த பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவோம். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள சுத்தப்படுத்துவோம்னு சொன்னாங்களே செஞ்சாங்களா?
ஈரோடு செம்மண்ணுக்கு ஆபத்து
ஆனா ஆத்து மணலைக் கொள்ளையடிக்கிறதுல மட்டும் வேலையை கரெக்ட்டா செய்வாங்க.. இத நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்கிறேன் மக்களே! நீங்க புரிஞ்சுக்கனும்… கொஞ்சம் அசந்தால் மற்ற மாவட்டங்களில்ல மணல் காணாம போன மாதிரி, மலைகள் காணாமல் போன மாதிரி நம்ம மாவட்டத்துல தனிவளத்தைக் கொடுத்த செம்மண்ணும் காணாம போவதற்கு வாய்ப்பு இருக்கிறது மக்களே!
நம்ம மண்ணுக்கும் நம்ம ஆத்துக்கும் விவசாயிக்கும்தான் இந்த மோசமான நிலைமை. அதானல ஏதாவது தொழில் செஞ்சு பொழைக்கலாம்னு பார்த்தா அதுக்கும் எங்க விடுறாங்க?
நெசவாளர்களுக்கு கூலி
தொழில்னு பார்த்தா நெசவாளர்களுக்கு 30% கூலி பாக்கி. அரசாங்கம் நம்ம நெசவாளர்கள்கிட்ட இருந்து கொள்முதல் செஞ்ச வேட்டி சேலைக்கான கூலியைக் கூட போராடித்தான் வாங்க வேண்டியதா இருக்கு. அது சலுகையோ, நலத்திட்டமோ உதவியோ இல்லை.. நம்ம உழைப்புக்கான ஊதியம். நம்முடைய உரிமை. அதுக்கே போராடுற நிலைமையில இந்த அரசாங்கம் நம்மை வெச்சிருக்கு.. நல்லா பார்த்துக்குங்க மக்களே உரிமைக்கு குரல் கொடுத்தவங்கதான் இவங்க..
பீக் அவர்ஸ் சார்ஜ் விவகாரம்
சிறு குறு தொழில்கள்.. பீக் அவர்ஸ் சார்ஜ்னு கரெண்ட்டுக்கு அநியாய விலை வெச்சு அதையும் நம்மளை செய்ய விடாம முடக்கி வெச்சிருக்காங்க.. அந்த பீக் அவர்ஸ் சார்ஜால எத்தனை வருஷமா எத்தனை ஆயிரம் பேர் பாதிக்கப்படுறோம். எவ்வளவு தொழில்கள் பாதிக்கப்படுது? நாமளும் கத்துறோம்.. போராடுறோம்.. எதையாவது இவங்க கண்டுக்கிறாங்களா? கொஞ்சம் யோசிங்க.. ஏன் இவங்க கண்டுக்க மாட்டேங்குறாங்கன்னு கொஞ்சம் யோசியுங்க. அப்பதான் பிரைவேட்டுல அதிக விலைக்கு கரெண்ட் வாங்க முடியும்.. அதுக்கு டெண்டர் விட முடியும். அப்படி டெண்டர் விட்ட மேட்டருல எல்லாம் என்ன நடக்கும்னு உங்களுக்கு ம் தெரியும் நமக்கும் தெரியும் நம்ம எல்லாருக்குமே தெரியும்.
இந்த மாதிரி ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்துக்கு போனாலும் பிரச்சனைகள் மேல பிரச்சனைதான். அதை எல்லாம் தீர்க்கிறதுக்கு ஒரு சொல்யூசன் கூட சொல்லாம இதுல வேற பெருமையா ‘மாடல் அரசு மாடல் அரசு’ன்னு சொல்றாங்க..
எவ்வளவு நேரம் பேசுனா என்னா?
இல்ல நான் கேட்கிறேன்.. கூச்சமா இல்லையா? இதை எல்லாம் கேட்டா அப்படியே நம்ம பக்கம் யூடர்ன் அடிச்சு வந்துருவாங்க.. விஜய் eன்ன அரசியல் பேச மாட்டேங்கறாரு… விஜய் என்ன சினிமா டயலாக் மாதிரி பேசுறாரு.. விஜய் என்ன பஞ்ச் டயலாக்தான் பேசுறாரு.. விஜய் என்ன 10 நிமிசம்தான் பேசுறாரு? விஜய் என்ன 9 நிமிசம்தான் பேசுறாரு? நான் எத்தனை நிமிசம் பேசுனா உங்களுக்கு என்ன சார்? நான் எப்படி பேசுனா உங்களுக்கு என்ன சார்? உளள விஷயம் என்னான்னு பாருங்க சார்?
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் மக்கள் ஃபேஸ் பண்ற பிரச்சனையை எடுத்து பேசிகிட்டு இருக்கேன்.. அது அரசியல் இல்லாம எதுதான் அரசியல்? உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில தரக்குறைவா அசிங்கம் அசிங்கமா பேசுறதுதான் அரசியல்னா அந்த அரசியல் நமக்கு வராது…
சலுகைகளுக்கு எதிரி இல்லை
வராதுன்னா… நல்லா வருமே.. உங்களைவிட அது எனக்கு நல்லாவே வரும்.. அதை வேணாம்னு விட்டு வெச்சிருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
காஞ்சிபுரத்துல நாம பேசும்போது உங்களால நம்மால அமைக்கப்படுகிற ஆட்சியில, நம்ம ஆட்சிக்கு வந்த உடனே என்ன செய்யப் போறோம்னு சொன்னோம்..அதை எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு
இப்ப சொல்றேன்.. விளக்கமா சொல்றேன். நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்ல…மக்களுக்கான சலுகைகள இலவசம்னு சொல்லி அசிங்கப்படுத்துறதுல
எனக்கு உடன்பாடு இல்ல…மக்கள் காசுல மக்களுக்கு செய்யறத எப்படிங்க இலவசம்னு சொல்வீங்க?… அப்படியே செஞ்சுட்டாலு ஓசியில போற.. ஓசியில போறன்னு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க.. என்ன கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சீங்களா? மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. இந்த விஜய் வந்து கேள்வி கேட்பான்.. இந்த விஜய் எப்பவும் மக்கள் பக்கம்தான்… அதே மாதிரி மக்களும் என் பக்கம்தான்.
என் மக்கள் மானத்தோட மரியாதையோட கவுரவமா வாழணும்…என் மக்கள் யாருக்கும் கீழ இல்ல… அப்படி அவங்க கவுரவத்தோட வாழணும்னா அவங்களுக்கான வாழ்க்கைத் தரம் உயரணும்…வாழ்க்கைத் தரம் உயரணும்னா அவங்களோட வாழ்வாதாரம் உயரணும்…வாழ்வாதாரம் உயர்ந்தாதான் பொருளாதாரம் உயரும்… பொருளாதாரம் உயர்ந்தாதான் வசதி வாய்ப்புகள் உயரும்…
இது எல்லாமே உயர்ந்தாலே ஆட்டோமேட்டிக்கா அவங்களோட வாழ்க்கைத் தரம், அவங்களுக்கான மரியாதை, அவங்களுக்கான கவுரம் எல்லாமே உயர்ந்துவிடும். இதுக்கான சூழ்நிலைகள், வழிமுறைகளை அந்த கவர்மெண்ட் அமைச்சு கொடுக்கனும். இதுக்கான திட்டங்களை செயல்படுத்தனும். இதை எல்லாம் செஞ்சாதான் இந்த அரசாங்கம் ஒரு நல்ல அரசாங்கம். இதைத்தான் அனைக்கு சொன்னோம்.
நாங்க TVK-டா…
உடனே சொன்னா மட்டும் போதுமா? எப்டி செயல்படுத்துவீங்க? நாங்க என்ன வாயிலே வடை சுடுறதுக்கு DMKவா? TVK-டா.
எல்லாருக்கும் வீடு இருக்கனும் சொன்னோம்.. உடனே எங்க ஆட்சியில எல்லோருக்கும் வீடு கட்டி கொடுத்துட்டோமேன்னு சொல்றது.. இல்லை நான் கேட்கிறேன்.. உங்களைத்தான் கேட்கிறேன். இங்க வாடகைக்கு இருக்கறவங்களே இல்லையா? எல்லோருக்கும் சொந்தமா வீடு கட்டிக் கொடுத்துட்டாங்களா?
ஒவ்வொரு வீட்டுலயும் ஒவ்வொருத்தரும் மினிமம் டிகிரி படிச்சிருக்கணும்னு சொன்னோம்…உடனே எங்க ஆட்சியில எல்லாரும் டிகிரி படிச்சி முடிச்சிட்டாங்கன்ற மாதிரியே சொல்றது… அது உண்மைன்னா… ஸ்கூல் லெவல்லயே ட்ராப் அவுட் அதிகமானது யாரோட ஆட்சியிலங்க?…பிள்ளைகள் ஸ்கூல்ல சேரலைன்னு சொல்லிட்டு 207 கவர்மெண்ட் ஸ்கூல்ஸ் மூடுனது யாரோட ஆட்சியிலங்க? இதுல கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு ட்ராமா வேற..
அடுத்து குடும்பத்துல ஒருத்தருக்கு நிரந்தர வருமானம் வரணும்…வேலை வாய்ப்ப உருவாக்கணும்னு சொன்னா.,.. நாங்க கொடுக்காத வருமானா? வேலையா?ன்னு சொல்றது.
காலி பணியிடங்கள்
எத்தனையோ லட்சம் காலிப் பணியிடங்கள நிரப்புவோம்னு வாக்குறுதி கொடுத்திட்டு ஆட்சிக்கு வந்தீங்கல்ல… எத்தனை லட்சம் காலி பணியிடங்களைநிரப்புனீங்க? அட்லீஸ்ட் ஒரு லட்சம் காலிப் பணியிடங்களையாவது நிரப்புனீங்களா? இப்படி எல்லாம் சொல்லிட்டு மக்களை ஏமாத்துறது யாரோட ஆட்சியிலங்க..?
சட்டம் ஒழுங்கு சரி இல்லை
அடுத்து ரொம்ப முக்கியமா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. சட்டம் ஒழுங்கு சரியா இல்லைன்னு சொன்னா.. தமிழ்நாட்லதான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமா இருக்குதாம். நீங்க சொல்லுங்க மக்களே! பெண்கள் பாதுகாப்பு இருக்கு? சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு? அவங்க சொல்றது உண்மையா? அவங்க சொல்றதை ஏத்துக்கறீங்களா?… சொல்லுங்க…கேட்குதா சார்?… இதுதான் ரியாலிட்டி.. இதுதான் நிஜம்.
நம்மோட ஆட்சியில சட்டம் ஒழுங்குல சமரசமே இருக்காது… நான் ரொம்ப ஸ்ட்ராங்காவே சொல்றேன்…தைரியமா இருங்க மக்களே!
காஞ்சிபுரத்துல சொன்ன மாதிரி மக்கள்கிட்ட நாம என்ன செய்வோம்னு சொன்னா எல்லாத்தையும் திரிச்சு, திரிச்சு பேசிகிட்டு, அவதூற பரப்பிக்கிட்டு இருப்பாங்க..
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தீயசக்தி திமுக
நான்கூட யோசிப்பேன்.. எம்.ஜி.ஆர் அவர்களும் மேடம் ஜெயலலிதா அவங்களும் ஒரே வார்த்தையில சொல்லி இந்த திமுகவை காலி பண்ணினாங்க இல்ல.. நான் கூட யோசிப்பேன்.. இவ்வளவு ஹார்ஸா பேசுறாங்க.. திட்டுறாங்கன்னு? இப்பதானே புரியுது.. அவங்க ரெண்டு பேரும் சொன்னதை நானும் இப்ப ரிப்பீட் பண்றேன்..
தி.மு.க ஒரு தீய சக்தி…
தி.மு.க ஒரு தீய சக்தி…
தி.மு.க ஒரு தீய சக்தி… தீயசக்தி…தீயசக்தி…தீயசக்தி…
என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே! TVK ஒரு தூயசக்தி.. தூயசக்தி TVK-க்கும் தீய சக்தி DMK-க்கும் இடையேதான் போட்டியே. என்னை மடக்கலாம்னு நினைக்கிறீங்க.. ஆனா இந்த சத்தத்தை ஒருநாளும் உங்களால மடக்க முடியாது. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால மட்டும்தான் முடியும். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் நம்ம கூட வந்து சேர்ந்தது நமக்கு ஒரு பெரிய பலம். அண்ணன் செங்கோட்டையன் மாதிரி இன்னும் நிறைய பேரு வந்து சேர இருக்காங்க.. அவங்க எல்லாருக்குமே அந்த உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்.
சினிமா டயலாக்கா? சிலப்பதிகார வரியா?
அதுமட்டுமல்ல இப்ப ரீசண்ட்டா நம்ம சிஎம் சார், ’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களேன்னு;’ சொன்னாரு…இது சினிமா டயலாக் இல்லயாம்…நான் எதனாலும் பேசுனா சினிமா டயலாக்காம்… சார் பேசுனா சினிமா டயலாக் இல்லையாம்.. சிலப்பதிகாரத்துல இருந்து எடுத்ததாம் அந்த லைன்’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீஙன்னு’. உங்களை எப்படிதான் சார் புரிஞ்சுக்கிறது? எந்த எந்த விஷயத்துல எல்லாம் உங்க கேரக்டரை புரிஞ்சிக்கிறதையும் நீங்களே சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும் சார்.
என் கேரக்டரை புரிஞ்சுக்குங்க
சட்டம் ஒழுங்குல நாடே சந்தி சிரிக்குதே அதுலயா? பெண்கள் பாதுகாப்புல நாடே சந்தி சிரிக்குதே அதுலயா? பொய் வாக்குறுதிகளா கொடுத்து ஏமாத்தி ஆட்சிக்கு வந்தீங்களே அதுலயா? எதுலசார் உங்க கேரக்டர புரிஞ்சுக்கிறது? ஆனா ஒன்னு.. தமிழ்நாட்டுல ஆட்சி செய்யுற நீங்களும் சரி.. ஒன்றியத்துல ஆட்சி செய்யுறவங்களும் சரி.. முதல்ல என்னோட கேரக்டரை புரிஞ்சுக்கனு சார்.. மக்களோட கேரக்டரை புரிஞ்சக்கனும்.. 2026 சட்டமன்ற தேர்தலோட அந்த கேரக்டரே கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் சார்.. அதை நீங்க தயவு செஞ்சு புரிஞ்சுக்கனும் சார். புரிஞ்சுக்கலைன்னா மக்களே உங்களுக்கு புரிய வைப்பாங்க சார். கான்பிடெண்ட்டா இருங்க சார்.. நல்லதே நடக்கும் சார்.. வெற்றி நிச்சயம் சார்.. மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கங்க சார்..இவ்வாறு விஜய் பேசினார்.
