புதுச்சேரியில் மார்ட்டின் மகன் கட்சிக்கு 2 சீட்.. அதிமுகவுக்கும் 2 தொகுதிகள்!

Published On:

| By Mathi

NR Congress Pudhucherry

புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்னர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சிக்கு பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுகவுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் கடந்த 16-ந் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. வரும் 23-ந் தேதியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் என்.ஆர். காங்கிரஸ், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உருவானதாக கூறப்பட்டது.

இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டால் தற்போது என்.ஆர். காங்கிரஸ் – பாஜக-அதிமுக கூட்டணியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2026 சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த அண்ணா திமுகவுக்கு வெறும் 2 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிபர் மகன் ஜான் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share