புதுவை தேர்தல்.. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.. இதுவரை 135 பேர் மனு!

Published On:

| By Mathi

Filing Nominations PDY

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மார்ச் 23-ந் தேதி கடைசி நாள். சனிக்கிழமை வரை மொத்தம் 135 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 16-ந் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. என்.ஆர். காங்கிரஸ் 16; பாஜக- 10; அதிமுக -2; லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இன்னமும் தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கிறது. அதனால் 30 தொகுதிகளிலுமே திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

விஜய்யின் தவெகவும் புதுவை தேர்தலில் களம் காண்கிறது. புதுவை வேட்பாளர்களை விஜய் இன்று அறிவிக்க இருக்கிறார்.

புதுச்சேரியில் நேற்று சனிக்கிழமை வரை மொத்தம் 135 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share