“இறுதி மூச்சு வரை பொதுவுடைமை சித்தாந்தங்களைக் கடைபிடித்தவர் நல்லகண்ணு” – முதல்வர் ரங்கசாமி இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nallakannu

சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 25) உடல் நலக்குறைவால் முதுபெரும் கம்யூனிட் தலைவர் நல்லகண்ணு காலமானார். அவரது மறைவிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராகப் போற்றப்படுபவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான தோழர் R. நல்லக்கண்ணு உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

ADVERTISEMENT

இந்திய சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் என தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை எளிய மக்களின் நலனிற்காகவே அர்ப்பணித்தவர் தோழர் R. நல்லக்கண்ணு. தனது இறுதி மூச்சு வரை, பொதுவுடைமை சித்தாந்தங்களைக் கடைபிடித்து அதற்கு இலக்கணமாக வாழ்ந்த அவர், எளிமையான வாழ்வு மற்றும் தன்னலமற்ற பொதுத்தொண்டின் வாயிலாக மக்கள் மனதில் என்றென்றும் நினைவு கூறப்படுவார். அவரது இழப்பு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share